சீமானும்-அண்ணாமலையும் கட்டி அனைத்து கொண்டதை சந்தோஷமாக பார்க்கிறேன்-வானதி சீனிவாசன்!

சீமானும்-அண்ணாமலையும் கட்டி அனைத்து கொண்டதை சந்தோஷமாக பார்க்கிறேன்-வானதி சீனிவாசன்!
அரசியலை கடந்து நாகரிகமான நல்ல விஷயமாக பார்ப்பதாகவும் பேட்டி.
கோவை:மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருந்தரங்கம் இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற அலுவலகம் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்றதை ஒட்டி கார்பன் அளவை குறைக்கும் நிகழ்வை முன்னெடுத்து உள்ளோம் எனவும் இன்று 2500 மாணவிகள் பேராசிரியர்கள் உடன் இணைந்து இந்த நிகழ்வை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.கார்பன் அளவை எந்த வகையில் குறைக்க முடியும் என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Virtual Tree Planting என்ற அடிப்படையில் நாம் பயன்படுத்தும் பொருள்களின் பயன்பாட்டை குறைத்து அதன் மூலம் எப்படி கார்பன் அளவை குறைக்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் 2500 மாணவிகள் 5 நிமிடங்கள் தங்கள் செல்போனை அனைத்து வைத்தன் மூலம் 5 கிராம் கார்பணுடன் சமன் செய்யும் நிகழ்வை தொடங்கி உள்ளதாகவும் இதனை தொடர்ச்சியாக அவர்கள் ஒரு வருடம் செய்யும்போது 182 மரங்கள் நடுவதற்கு சமமாகும் என தெரிவித்தார். பள்ளிகளில் காலியாக இருக்கும் இடங்களில் மரங்களை வைத்து பராமரிப்பது போன்ற முயற்சிகளை ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கும்போது உலக வெப்பமயமாதல் சிக்கலுக்கான் தீர்வுக்கு எளிய நடை போடுவதாகவும் 2070ற்குள் இந்தியா கார்பன் சமநிலை அடைய வேண்டும் என்கின்ற இலக்கை பிரதமர் மோடி வைத்துள்ளார் எனவும் 2030 ஆம் ஆண்டுக்குள் நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் பாதி non conventional energy source ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கில் 1 கோடி வீடுகளுக்கு சூரிய ஒளி மின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கூறினார். தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.அந்த வகையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள virtual tree plantation மிகுந்த மன நிறைவை அளிக்கிறது என்ற அவர் முழுமையான பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க இயலாமல் உள்ளதாகவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தன்னார்வை தொண்டு நிறுவனங்களும் முயற்சி எடுத்து வரும் நிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு மக்களின் பங்காளி இருந்தால் பிளாஸ்டிக் ஒழிப்பை சாத்தியம் ஆக்க முடியும் என்றும் முடிந்தவரை இது போன்ற முயற்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்றார். வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்தை கட்டுபடுத்த ஈடுபட்டவர்களுக்கு ஒரு வாரத்தில் 27 லட்சம் செலவழித்ததாக கூறியுள்ளனர். செலவினங்கள் குறித்து மாநகராட்சி தற்போது கொடுத்துள்ள பதில் பொத்தாம் பொதுவாக உள்ளது திருப்திகரமாக இல்லை என்றவர் ஒரே நாளில் சில தீர்மானங்கள் குறித்து விவாதம் வேண்டாம் என்பதற்காக ஒரே நாளில் 300 க்கும் ஏற்பட்ட தீர்மானங்களை நிறைவேற் இருக்கலாம். ஒரு சிலவற்றை மக்களின் பார்வையில் இருந்து மறைக்க வேண்டும் என்பதற்காக செய்திருக்கலாம் என்றார்.திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பில் இருக்கிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீரழியம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் முதலமைச்சர்கள் தான் மாறி இருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்பாடுகள் மாறவில்லை என்றும் அரசியல் தலைவர்கள் கொலை,பெண்களுக்கு எதிரான பிரச்சினை, பட்டியல் இனத்தவர்களுக்கு கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவாகிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதிகாரிகளை மாற்றம் செய்து கண்துடைப்பு செய்வது அரசின் வேலை அல்ல எனவும் கண்துடைப்பு செய்வதற்காக அதிகாரிகள் மாற்றம் செய்யப்படக் கூடாது எனவும் அவர்களை சுதந்திரமாக பணி செய்ய விடவேண்டும் என்றார். மாநில பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களின் பெயர்களும் கூறப்படுவதில்லை என்றவர் இதற்கு முன்பு நடைபெற்ற பட்ஜெட்டில் கூட அனைத்து மாநிலங்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை எனவும் அறிவிக்கும் திட்டங்களில் நம் மாநிலத்திற்கு எவ்வளவு வந்துள்ளது.மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில் நிறுவனம் அதிகம் இருக்கும் மாநிலங்கள் என பொதுவான திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு தான் பலன் பெற போகிறது என்றார்.திமுக கூட்டணி கட்சிகள் முழுக்க முழுக்க அரசியலுக்காக பாஜக கூட்டணி குறித்து ஏதாவது கூற வேண்டும் மோடியைப் பற்றி திட்டினால் தான் அவர்களுக்கு அரசியல் வாழ்க்கை என முடிவு உள்ளவர்கள் எது என்றாலும் மத்திய அரசை குறை கூறுவார்கள் எனவும் எந்த ஒரு நிர்வாக விஷயத்திலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வளர்ச்சி வேகமாக இருக்கும்.ஆனால் அரசியலில் நிர்வாகம் குறித்து இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை இல்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அண்ணாமலையும் கட்டியணைத்துக் கொண்டது சந்தோஷமாக பார்க்கிறேன் என்றவர் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் என்றாலே எதிரி கட்சிகள் நல்லது கெட்டவைக்கு கூட செல்லாமல் இருந்த சூழலில் இரண்டு பேரும் இணைந்து இருந்ததை பார்க்கும் போது அற்புதமாக இருந்ததாகவும் அரசியலைக் கடந்த நாகரிகம் என்று பார்க்கும்போது அது ஒரு நல்ல விஷயமாக பார்க்கிறேன் என்றார்.பாஜகவை பொறுத்தவரை எங்களோடு சேர்ந்து அரவணைத்து தமிழ்நாட்டில் புதிய அரசியல் செய்வதற்கு யார் வந்தாலும் சந்தோஷப்படுவோம் எனவும் கட்டியணைப்பதன் மூலம் புதிய உறவு வருகிறதா என்பதை அவர்கள் தான் கூற வேண்டும் என்றார்.த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் மாநாடு நடத்துவது தொடர்பாக பேசியபோது அரசியல் கட்சிகள் என்றால் மாநாடு நடத்துவது என்பது இயல்பு தான் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Next Story