திமுக-பாஜக மக்களை இரண்டு பக்கமும் மத்தாளம் போல் அடிக்கின்றனர்-சிங்கை ராமசந்திரன்!
Coimbatore (south) King 24x7 |29 July 2024 2:46 PM GMT
அதிமுகவை பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது என விளாசல்.
கோவை:ஹுசூர் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மோடிக்கு நேரடியாக ஹாட் லைன் தொடர்பு இருப்பதாக கூறி மக்களின் கோரிக்கைகள் மற்றும் வாக்குறுதிகளை ஒரே போனில் பிரச்சினை தீர்வு என்று சொல்லிய அண்ணாமலை என்னவாயிற்று? என கேள்வி எழுப்பினார்.நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணாமலை அளித்த வாக்குறுதிகள் எதும் நடக்கவில்லை எனவும் கோவை வளர்ச்சிக்கு எந்த விதமான திட்டங்கள் வரவில்லை என்ற அவர் அண்ணாமலையின் தேர்தல் வாக்குறுதி என் கனவு நமது கோவை?? கனவாக போய்விட்டது என்றும் பாஜக அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக வாசித்தவர் இவைகளை படிப்பதால் நேரம் வீண் எனவும் கோவைக்கு எந்த திட்டமும் ஏன் அறிவிக்கவில்லை என கேள்வி எழுபினார்.திமுகவும் -பாஜகவிற்கும் எந்த வித்தியாசமும் இலலாதவர்கள் எனவும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றதவர்கள் இவர்கள் என்றார். அதிமுகவை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது என்ற சிங்கை ராமசந்திரன் கோவைக்கு சம்பந்தமே இல்லாத அண்ணாமலை எதற்காக இங்கு போட்டியிட்டார் என கேள்வி எழுப்பியவர் அவர் அதிகம் பேசுவதாகவும் 21 தொகுதியில் பாஜக டெபாசிட் கூட வாங்கவில்லை என்றார். கோவை மக்களுக்கு இவர்களால் நல்லது செய்ய முடியாது எனவும் அதிமுக தான் வளர்ச்சி திட்டங்கள் செய்யும் என்றார்.மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைவரும் பாதிப்படைந்து உள்ளனர் எனவும் திமுகவும் பாஜகவும் மக்களை மத்தாளம் போன்று இரண்டு பக்கமும் அடிப்பதாக தெரிவித்தார்.தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி கோவைக்கு ஒரு திட்டத்தை கொடுத்தாரா? எனவும் தமிழ்நாட்டிற்கு மோடியை பலமுறை அண்ணாமலை அழைத்து வந்த நிலையில் ஏன் ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.அண்ணாமலை சொல்லிய ஹாட் லைன் எண் என்னாச்சு?ரீசார்ஜ் செய்யபடவில்லையா?அல்லது ரீசார்ஜ் செய்து தர வேண்டுமா என கேள்வி எழுப்பினார். வெள்ளலூர் குப்பை கிடங்கு தீயணைப்பு பணியின் போது 27 லட்சம் டீ செலவு என்பது? நம்பும்படியாக இல்லை எனவும் குப்பை கிடங்கை டீ யை ஊற்றி அனைத்து இருப்பார்கள் போல என கிண்டலடித்தார். திமுகவினர் விஞ்ஞான ஊழல் செய்பவர்கள் எனவும் வீடு கட்ட ஆன்லைனில் அனுமதி அளித்து அமைதியாக கட்டணத்தை உயர்த்தி உள்ளனர் என சிங்கை ராமசந்திரன் தெரிவித்தார்.
Next Story