ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு "தோப்புகளில்" தர்ப்பணம்!

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாகும்!
ஆடி, புரட்டாசி, தை மாதத்தில் வரும் அமாவாசைகள் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாள்களில் நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு அர்ச்சகர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாகும். இதனால் அமாவாசை தினத்தில் மோகனூர் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை என்பதால், கடற்கரை யோரங்களிலும், ஆற்றங்கரையோரங்களிலும் ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.... இந் நிலையில் மோகனூர் காவிரி ஆற்றில் வருடம் தோறும் ஆயிரக்கணக்கானோர் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசைகளில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் அதிகாலையில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க அப்பகுதிக்கு வந்தனர் காவிரி ஆற்றில் அதிக அளவு வெள்ள நீர் வருவதால் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே அருகே உள்ள தோப்புகள் மற்றும் அப்பகுதிகளில்...வாழை இலையில், வெற்றிலை, பாக்கு,தேங்காய், வாழைப்பழம், பச்சரிசி, காய்கள், கீரைகள் வைத்து தங்களது குடும்பத்தில் இறந்து போன முன்னோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரிசி மாவில் உருண்டை பிடித்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர், தங்களால் காவிரி ஆற்றுக்கு சென்று திதி கொடுக்க முடியவில்லை என்று மிகவும் வருத்தம் அடைந்தனர்.
Next Story