பள்ளி தலைமையாசிரியர்கள், பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்!

பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து பெறப்பட்ட வழிகாட்டுதல்களையும், அரசு ஆணைகளையும் விளக்கமாக எடுத்துரைத்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நடத்த தெரிவிக்கப்பட்டது.
அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்வது குறித்து மாநில, மாவட்ட அலுவலகங்களின் சீரிய வழிகாட்டுதலின்படி திருச்செங்கோடு வட்டாரத்தின் 88 அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வட்டார வள மையத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து பெறப்பட்ட வழிகாட்டுதல்களையும், அரசு ஆணைகளையும் விளக்கமாக எடுத்துரைத்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நடத்த தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு வட்டாரக் கல்வி அலுவலர் (அலகு -2 )அருள் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கா.சந்திரசேகர் (பொ) முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுபதி பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு சார்ந்து விளக்கினார். இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சரவணன், ரேவதி, உதயபானு, மகேஸ்வரி மற்றும் ஷமீனாபானு ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தினைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் பெற்றோர்களுக்கான விழிப்புணர் கூட்டம் நடைபெற்றது. வட்டாரத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலை, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை இந்த வருடம் 24 பேரை தேர்ந்தெடுக்க வேண்டும். சென்ற ஆண்டு 20 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது முன்னாள் மாணவர்கள் நான்கு பேரை இணைக்கலாம் என்ற அடிப்படையில் 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களில் தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கு வாக்கெடுப்பு எவ்வாறு நடத்துவது, அவ்வப்போது நேரும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது மற்றும் அனைத்து பெற்றோர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்தும் விளக்கமாக வழிமுறைகள் வழங்கப்பட்டது. வருகிற 10, 17, 24 மற்றும் 31 ஆகிய நான்கு தேதிகளில் முதல் கட்டமாக 10 ந் தேதி தொடக்கப் பள்ளிகளில் 50% பள்ளிகளிலும் இரண்டாம் கட்டமாக 50% பள்ளிகளிலும், மூன்றாம் கட்டமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், நான்காவது கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளிகள் அனைத்திலும் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடத்தி புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் இக்கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளடக்கிய குழுவினர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாண்டு அனைத்து அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பல்வேறு புதிய உத்திகளை கையாளுமாறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்செங்கோடு மலையடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் ராஜா கவுண்டம்பாளையம்பாளையம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டமும், திருச்செங்கோடு வட்டார வள மையத்தில் தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டுதல் கூட்டமும் நடைபெற்றது. இம்முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தெ.இரகுபதி, தலைமை ஆசிரியை தேன்மொழி, கல்வியாளர் கண்ணன், முன்னாள் மாணவர் தேவராஜ், ஒருங்கிணைப்பாளர் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.
Next Story