மேயர் தேர்தலுக்கு முன் கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம்!

மேயர் தேர்தலுக்கு முன் கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம்!
போட்டி வேட்பாளரை தவிர்க்க ஆலோசனை.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியை திமுக தலைமை அறிவித்துள்ளது.முதல் முறையாக மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ரங்கநாயகிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது கட்சியில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் திருமண மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தல் திமுக தலைமையில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு துவங்க இருக்கும் நிலையில் எட்டு மணிக்கு திமுக கவுன்சிலர்களும் மண்டபத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் நேரு,அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் கோவையில் முகாமிட்டு மீண்டும் திமுக கவுன்சிலர்களிடம் காலை அறிவுரை வழங்க இருக்கின்றனர். நெல்லை மாநகராட்சி தேர்தலில் திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளருக்கு போட்டியாக வேட்பாளர் களமிறங்கி குறிப்பிடதக்க வாக்குகளை பெற்ற நிலையில் அதுபோன்று கோவையில் நடந்து விடக்கூடாது என கூடாது என்பதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக கவுன்சிலர்கள் அனைவரையும் ஓரே இடத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேயர் தேர்தலுக்கான பணிகளை கவனிக்க சென்னையில் இருந்து திமுக தலைமை கழகத்தில் இருந்து அன்பகம் கலை என்பவரை கட்சி தலைமை அனுப்பியுள்ளது. மாநாகராட்சியில் அனுபவம் வாய்ந்த சீனியர்கள் பலர் இருக்கும் நிலையில் முதல்முறை கவுன்சிலரான ரங்கநாயகிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது திமுக கவுன்சிலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story