கன்னியாகுமரி ஜவான்ஸ் நடத்தும் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி

X
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் பகுதியில் வைத்து நாட்டின் -77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பசுமை மற்றும் தூய்மையை வலியுறுத்தி கன்னியாகுமரி ஜவான் ஸ் நடத்தும் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி இன்று (11-07 - 2024) காலை பத்மநாபபுரம் அரண்மனை அருகில் வைத்து தொடங்கியது. இப்போட்டியினை தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளியின் துணை முதல்வரும், கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான சகாய ஜோஸ், தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் உதய சூரியக் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் 14 -வயது முதல் -17 வயது வரையிலான ஆண்களுக்கு 12- கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 7 - கிலோமீட்டர் தூரமும் மற்றும் 17-வயதிற்கு மேல் உள்ள ஆண்களுக்கு -21 கிலோமீட்டர் தூரமும் பெண்களுக்கு 11- கிலோமீட்டர் தூரமும் ஓட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற முதல் 10- நபர்களுக்கு ரூபாயும், சான்றிதழ்களும் மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு கடந்த -2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்துவருடம்தோறும் மாரத்தான் நிகழ்ச்சிகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story

