கடைக்கு தீ வைத்தவர் கைது
Perambalur King 24x7 |16 Aug 2024 4:22 AM GMT
போலீசார்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவர் மோட் டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு அங்கேயே படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை கடை தீப்பற்றி இதில் ™ எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் கடையில் வைத்தி ருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வெங்கடேஷின் உறவினரான கல்லை கிராமத்தை சேர்ந்த வல்லரசு (30), அவரது நண்பரான ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடையில் பெட்ரேல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, தமிழ்செல்வனை போலீ சார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வல்லரசுவை வலைவீசி தேடி வருகின்றனர்
Next Story