அன்னவாசலில் சிறுவன் சடலமாக மீட்பு!
அன்னவாசல் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மகன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் சிறுவன் இன்று காலை முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சந்தேகம் அடைந்த பெற்றோர் தீயணைப்புதுறையினர் மூலம் அருகில் இருந்த குளத்து கிணற்றில் தேடியபோது சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Next Story





