பிரம்மரிஷி மலையில் கோ பூஜை
Perambalur King 24x7 |19 Aug 2024 12:47 AM GMT
உலக மக்கள் நலன் வேண்டி
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பிரம்மரிஷி மலையில் பகவான் காகபுஜண்டர், அன்னை சித்தர் ராஜகுமார் குருஜியின் அருளாசியுடனு.ம், ஆண்டுதோறும் ஆவணி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில், உலக மக்கள் நலன் கருதியும், மழை பெய்யவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், அரசாங்கத்தில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்து மக்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் தொடர்ந்து 51 நாட்கள் கோமாதா பூஜை நடைபெறும், இந்தாண்டுக்கான கோ பூஜை ரோகிணி மாதாஜி தலைமையில் நேற்று தொடங்கியது, பூஜையை தவயோகி தவசிநாதன் சுவாமிகள் நடத்தி வைத்தார், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story