மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
Perambalur King 24x7 |20 Aug 2024 1:19 PM GMT
பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்
பெரம்பலூரில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....... பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு வாரியமே நேரடியாக தினக்கூலியை வழங்கிட வேண்டும், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்திட வேண்டும், பிரிவிற்கு இரண்டு பேரை ஒப்பந்தக்காரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்கிட வேண்டும், 60,000 மேற்பட்ட காலிப்பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைஅரசுக்கு வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கோட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்டக் கிளை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story