பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திடீர் ஆய்வு
Perambalur King 24x7 |21 Aug 2024 12:37 AM GMT
அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (20.08.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்தும் அவ்வப்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் அறிக்கை எண் 77ல் தெரிவித்திருந்தார். 234/77 ஆய்வுப்பயணம் என்ற தலைப்பில் அரசுப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் நடந்துகொண்டிருந்த சிறப்பு வகுப்புகளைப் பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் பள்ளியின் வகுப்பறைகள், கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்
Next Story