விக்கிரவாண்டியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்

விக்கிரவாண்டியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்
விக்கிரவாண்டியில் மாணவர்களின் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கம், சங்கமம் சர்வீஸ் பவுண்டேஷன், வி.சாத்தனுார் ஜெய் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, அரிமா சங்க தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார்.முக்கிய சாலை வழியாக சென்ற ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிச் சென்றனர்.பள்ளி தாளாளர் ராஜேஸ்வரி, முதல்வர் ரேவதி, லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் திலீப் குமார், பிரகதீஸ்வரன், செயலாளர் கிேஷார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story