குமரியில் இன்று காலையில் ஆற்றில் அடித்து செல்லப் பட்ட பாலம்

X
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதற்கு இடையில் தற்போது மீண்டும் கடந்த ஒரு வார காலமாக குமரி மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர கிராமங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மோதிரமலையில் இன்று உருவாகும் குற்றியாற்றின் குறுக்கே ரூ 5 கோடி மதிப்பில் பாலம் வேலை நடைபெற்று வந்தது. இதற்காக ஆற்றின குறுக்கே ஏற்கனவே இருந்த தரைப்பாலம் உடைக்கப்பட்டு, தற்காலிக நடை பாதை பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கோதையாறு நீர்மின் நிலையத்தில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை தற்காலிக பாலத்தை வெள்ளம் அடித்து சென்றது. இதனால் அப்பகுதி மலை கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவ மாணவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story

