பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

மனு முகாம்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று 21.08.2024-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். மேலும் இந்த சிறப்பு மனு முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.மதியழகன் (தலைமையிடம்) மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் M.தனசேகரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டார்கள். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 48 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Next Story