செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர பூஜை

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர பூஜை
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் 12 ராசிகளுக்கு 12 தூண்களில் 12 குபேர பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும் தனி சந்நிதியில் வீற்றிருக்கும் சித்திரலேகா சமேதகுபேர பெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று குபேர யாக வேள்வி நடைபெறும். அதன்படி நேற்று குபேர யாக வேள்வி நடைபெற்றது. கணபதி வழிபாட்டோடு தொடங்கி யாக வேள்வியில் பல்வேறு மூலிகைப் பொருட்கள் செலுத்தப்பட்டு மஹா பூர்ணாஹுதியும், நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மலர் அலங்காரம் செய்யப்பட்டது இதனையடுத்து மஹா தீபாரதனை நடைபெற்றது. இந்த குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதன் மூலம் செல்வ வளம் பெருகும், கடன் பிரச்சினைகள் தீரும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story