முருக்கேரி ஏரி தூர்வரப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

முருக்கேரி ஏரி தூர்வரப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டு பருவமழை என்பதும் மரக்காணம் வட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழையினால் சேதம் மற்றும் கிராமங்களில் மழைநீர் புகுவது ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வரும் விழுப்புரம் மாவட்டத்திலேயே பருவமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் வட்டங்களில் மரக்காணம் வட்டம் முதலிடம் வகிக்கும் இதில் மரக்காணத்தில் முக்கிய பிரச்சினையாக ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போது பிரம்மதேசம் அருகே உள்ள முருக்கேரி கிராம திண்டிவனம் - மரக்காணம் பிரதான சாலையில் மழை நீரானது ஏங்கி நின்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வணிகர்கள் என பலரும் மிகுந்த அவதி அடைந்து வந்தனர், இதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு திண்டிவனம் - மரக்காணம் சாலை விரிவாக்க பணிகள் துவங்கப்பட்டதால் வடிநீர் மார்பளவிற்கு மழைநீர் ஆனது தேங்கி நின்றது மேலும் அருகில் இருந்த பல்வேறு கடைகளுக்கும் வீடுகளுக்கும் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினர் அப்போது உறுதியாக மழை நீரை அகற்ற வேண்டும் என சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர், இந்த நிலையில் இது குறித்து முதலாவதாக மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது முருக்கேரியில் அமைந்துள்ள ஏரியானது தூர்வாரப்படாததால் ஏரியில் மழைநீர் தேங்கி நிற்காமல் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைவது கண்டறியப்பட்டது இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார் அப்போது எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு முருக்கேரி ஏரியை உடனடியாக தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார், இந்த நிலையில் நேற்று முருக்கேரி ஏரியை தூர்வாரும் பணியானது துவங்கியுள்ளது, முருக்கேரி ஏரியை தூர்வாரி அங்கிருக்கும் திண்டிவனம் - மரக்காணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக பயன்படுத்த மரக்காணம் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார், இதனால் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story