பிரம்மதேசத்தில் மூன்று கோயில்களில் உண்டியல் உடைத்து கொள்ளை

பிரம்மதேசத்தில் மூன்று கோயில்களில் உண்டியல் உடைத்து கொள்ளை
போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் எல்லைக்கட்டி ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தில் அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார், இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் சுவாமிக்கு பூஜை செய்துவிட்டு ஆலயத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர் மீண்டும் இன்று காலை வந்து பூஜைக்காக கோவிலை திறக்க சென்ற போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கோவிலுக்குள் சென்று பார்த்தபோது சுவாமியின் மீது வைத்திருந்த தங்கத்தால் ஆன ஆறு பொட்டுகள், நான்கு கால் கொலுசுகள் மற்றும் கோவில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது, இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார், அதேபோன்று அதே கிராமத்தில் உள்ள சிவன் ஆலயத்திலும் உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடுபோய் உள்ளது, அதனைத் தொடர்ந்து காலணி பகுதியில் உள்ள ஸ்ரீ ஆலடியம்மன் ஆலயத்திலும் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை காசுகள் மற்றும் கோவிலில் இருந்த தங்கத்தால் ஆன நான்கு பொட்டுகள் திருடு போயுள்ளது இந்த தொடர் திருட்டால் பிரம்மதேசம் கிராம பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சடைந்துள்ளனர், மேலும் இதுகுறித்து பிரம்மதேசம் போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story