காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

ஆட்டோ ஓட்டுனருக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய போலீசார்
பெரம்பலூர் மாவட்டம் மலையப்ப நகரைச் சேர்ந்த அமிதாப்பச்சன் என்பவர் தனது மகள் பெரம்பலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வருவதாகவும் கடந்த 21.08.2024 -ம் தேதி காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு பேருந்தில் அனுப்பி வைத்ததாகவும் பள்ளி சென்ற தனது குழந்தை பள்ளிக்கு செல்லவில்லை என்றும் மீண்டும் வீட்டிற்கும் வரவில்லை என்றும் பெரம்பலூர் காவல் நிலையத்த்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி பெரம்பலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன்படி அச்சிறுமியின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை வைத்து தேடி வந்த தனிப்படையினர் பெரம்பலூர் ஆட்டோ ஓட்டுநர்களிடமும், பெரம்பலூர் நகரத்தில் உள்ள கடைகளிலும் விசாரித்து வந்தனர் மேற்படி சிறுமியை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறும் கூறினர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் அச்சிறுமியை கண்ட ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணகுமார் (38) என்பவர் மேற்படி சிறுமியை பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் முன்னிலையில் பெரம்பலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் சிறுமியின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் பத்திரமாக அச்சிறுமியை ஒப்படைத்ததுடன் மேற்படி நற்செயலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு பெரம்பலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Next Story