குமரியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள்
Nagercoil King 24x7 |25 Aug 2024 2:54 PM GMT
மாவட்ட எஸ் பி அறிவிப்பு
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7 -ம் தேதி நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு படுவது வழக்கம். இந்த ஆண்டும் வரும் 7ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலைகள் வரும் 13,14, 15 ஆகிய தேதிகளில் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. 13-ஆம் தேதி சிவசேனா சார்பிலும், 14- ஆம் தேதி இந்து மகா சபா சார்பிலும், 15- ஆம் தேதி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, பாரதிய ஜனதா சார்பில் உள்ள விநாயகர் சிலைகளும் கரைக்கப்படுகிறது. இந்த சிலைகள் கரைப்பதற்கான இடங்களை வெளியிட்டு போலீஸ் தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், - வழக்கம்போல் கடந்த ஆண்டு சென்ற வழித்தடம் வழியாகவே ஊர்வலம் செல்ல வேண்டும், புதிய வழித்தடத்திற்கு அனுமதி இல்லை, சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் காவல்துறை சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். அனுமதி இன்றி சிலைகளை வைக்கக்கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா சிலை கரைப்பு நிகழ்ச்சி அமைதியாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story