ஆழ்கடலில் குமரி மீனவரின் படகில் திடீர் தீ விபத்து
Nagercoil King 24x7 |25 Aug 2024 3:21 PM GMT
படகு எரிந்து மூழ்கியது
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே நீரோடி மீனவ கிராமத்தை சேர்ந்த றாபி என்பவருக்கு சொந்தமான ஜகோவா நிசி என்ற பைபர் படகில் கடந்த 23 ம் தேதி ஆழ்கடலுக்கு கேரள மாநிலம் மலப்பா துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் றாபி உட்பட ஆறு மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் நேற்று முன்தினம் மதியம் ஆழ்கடல் பகுதியில் வலை வீசி மீன்பிடித்து கொண்டிருந்த போது, படகு திடீரென தீ பிடித்து எரியத் துவங்கி உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் படகில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்தும் முடியால் போக சத்தம் போட்டு கத்தி உள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த படகில் இருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு அவர்களது படகுகளில் ஏற்றிக்கொண்டு எரிந்து கொண்டிருந்த படகையும் கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வர முயன்றுள்ளனர். ஆனால் கரை வந்து சேருவதற்குள் படகு முழுவதும் தீ பிடித்து எரிந்து கடலில் மூழ்கி போய் உள்ளது. இதனால் படகு உரிமையாளருக்கு பல இலட்சம் ருபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மின் பேட்டரியில் ஏற்பட்ட கசிவே படகு தீ பிடித்து எரிய காரணம் எனக் கூறப்படுகிறது.
Next Story