எஸ்பிஎம் கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி
Dindigul King 24x7 |26 Aug 2024 5:43 AM GMT
எஸ்பிஎம் கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்
உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி திண்டுக்கல் தாமரைப்பாடி பகுதியில் உள்ள எஸ்பிஎம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. செபாமாஸ்டர் தலைமையில் 3 வயதுக்குட்பட்டோர், 5 வயதுக்குட்பட்டோர், 10 வயது குட்பட்டோர், 12 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்டோர் என ஐந்து பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. மேலும் ஒற்றை சிலம்பம், இரட்டைச் சிலம்பம் சுருள்வால் உள்ளிட்ட வகைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு எஸ் பி எம் கல்லூரியின் நிறுவனர் ஜெயராஜ் மற்றும் புரவலர் திபூர்சியஸ் ஆகியோர் இணைந்து கேடயம் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தனர். மேலும் இந்த போட்டிகளில் திண்டுக்கல், தேனி, தென்காசி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்று இருந்தனர்.
Next Story