சங்கரன்கோவில் அருகே சாலையோரம் மாத்திரை வீசி சென்றனர்
Sankarankoil King 24x7 |26 Aug 2024 6:40 AM GMT
சாலையோரம் மாத்திரை வீசி சென்றனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள வைக்கவுண்டன்பட்டி கிராமத்தில் இருந்து வரகனூர் செல்லும் சாலையோரம் தமிழக அரசால் வழங்கக்கூடிய மாத்திரைகள் சிதறி கிடப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கூடினர். அப்போது அரசு சார்பில் வழங்கப்படும் காய்ச்சல், சளி, இருமல் உள்பட பல்வேறு நோய்க்கான 1000க்கும் மேற்பட்ட மாத்திரை அட்டைகள் கேட்பாரற்று சாலையோரங்களில் சிதறி கிடந்தன. இதனை அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. சாலைகளில் சுற்றித் திரியும் மனநோயாளிகள் அல்லது கால்நடைகள் இதை தின்றால் விபரீதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வைக்கவுண்டன்பட்டி முதியவர் ஒருவர் கூறுகையில், “தமிழக சுகாதாரத் துறைக்கு வரும் மாத்திரைகளை முறையாக நோயாளிகளுக்கு வழங்காததால் காலாவதியான மாத்திரைகளை சாலையோரத்தில் வீசுகின்றனர். முறையாக தீ வைத்தும், குழியில் போட்டும் மூடாமல் வீசுவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் மாத்திரை அட்டைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
Next Story