ஆம்பூரில் மின் ஊழியர்கள் போல் நடித்து நகை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது
Tirupathur King 24x7 |26 Aug 2024 6:52 AM GMT
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் ஊழியர்கள் போல் நடித்து ஆளில்லாத நேரத்தில் வீடுகளில் புகுந்து நகை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் ஊழியர்கள் போல் நடித்து ஆளில்லாத நேரத்தில் வீடுகளில் புகுந்து நகை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் நகைகள் பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காவல் உட்கோட்டம் ஆம்பூர் இந்திரா நகர் 3-வது தெருவில் வசிக்கும் சுரேஷ் என்பவரது வீட்டில் கடந்த ஜூலை 27-ம் தேதி உறங்கிக் கொண்டிருந்த மனைவி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதே போல் ஆம்பூர் மாங்காதோப்பு 3-வது தெருவில் வசித்து வரும் முஸ்தபா என்பவர் ஆக.13. ஆம் தேதி மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகிய நகைகளை திருடிச் சென்றுள்ளனர். புகாரின் பேரில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதனூர் எம்.எம். நகரில் வசித்து வரும் பள்ளி ஆசிரியை சஞ்சலாமணி கடந்த ஜூலை 27-ம் தேதி பள்ளிக்கு சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைந்த தங்கச் சங்கிலி மற்றும் தங்க வளையல் உள்ளிட்ட 10 சவரன் நகைகள் திருட்டு போயிருந்தது. இதனை தொடர்ந்து ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் கிராமத்தில் வசித்து வரும் சரோஜா என்பவரின் வீட்டில் கடந்த ஆக.13-ம் தேதி பீரோவில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம், தங்ககாசு மூக்குத்தி ஆகிய நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமான புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர் திருட்டு சம்பவங்களால் அதிர்ச்சிக்குள்ளான ஆம்பூர் பகுதி மக்கள் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் ஆம்பூர் டிஎஸ்பி அறிவழகன் மேற்பார்வையில் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய காவல் ஆய்வாளர் வெங்கடேசன், ஆம்பூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், ஆகியோர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் ஆக.23 ஆம் தேதி ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாராப்பட்டு கூட்ரோடு பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு நபர்கள் பதிவெண் இல்லாத இருசசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தனர். அவர்களை நிறுத்தி போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர் இதனால் சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கொல்லைமேடு பகுதியை சேர்ந்த தினரகன் (38), அக்ராபாளையம் குளத்துமேடு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (32) என்பதும், இருவரும் ஆம்பூர் நகர மற்றும் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் யாரும் இல்லாத வீடுகளை கண்டறிந்து மின் ஊழியர்கள் போல் நடித்து வீடுகளுக்குள் புகுந்து பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. அதன்பேரில் போலீஸார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பல்வேறு பகுதிகளில் திருடிய நகைகளை விற்ற பணத்தில் வாங்கிய ரூ.16 லட்சம் மதிப்பிலான 2 மினி லாரிகள், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனம் உட்பட 22 லட்சம் மதிப்பிலான வாகனங்கள், தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரையும் ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்பூர் நகரம் மற்றும் கிராமிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளை கண்டறிந்து மின் ஊழியர்கள் போல் நடித்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைதாகி அவர்களிடமிருந்து 22 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் வாகனங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆம்பூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story