மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
Salem King 24x7 |26 Aug 2024 8:21 AM GMT
காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது
செரிபிரல் பால்சி அசோசியேசன் சார்பில் பெருமூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு அசோசியேசன் தலைவர் உமாராணி தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 100, 200, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டன. மேலும் வெற்றி பெற்றவர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அசோசியேசன் உதவி தலைவர் பரணிதரன், செயலாளர் சித்தேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story