சத்தியமங்கலத்தில் போலீஸார் நடத்திய திடீர் வாகன சோதனையில் மான் கறி பிடிபட்டது
Bhavanisagar King 24x7 |26 Aug 2024 9:20 AM GMT
சத்தியமங்கலத்தில் போலீஸார் நடத்திய திடீர் வாகன சோதனையில் மான் கறி பிடிபட்டது
சத்தியமங்கலத்தில் போலீஸார் நடத்திய திடீர் வாகன சோதனையில் மான் கறி பிடிபட்டது சத்தியமங்கலம் - மேட்டுபாளையம் ரோட்டில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் டிராபிக் இன்ஸ்பெக்டர் குருசாமி, எஸ்.ஜ மகேஸ்வரன், டிராபிக் போலீசார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் இணைந்து குற்ற செயல்கள் தடுக்கும் வகையில் திடீரென இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது அந்த வழியாக வந்த இரு சக்கரங்களை தடுத்து நிறுத்தி மாஸ் செக்கி ங் செய்தனர். வாகனத்தின் ஆர்.சி புக், லைசன்ஸ் , இன்ஸ்சூரன்ஸ், வேறு ஏதாவது மறைத்து வைத்துள்ளனரா என வாகனத்தின் பெட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களில் சோதனைக்கு பின்னரே அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஒரு பைக்கில் இருந்த பையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வாகன ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் ஆசனூர், கெத்தஷால் பகுதியைச் சேர்ந்த பொம்மன் என தெரிய வந்தது. மேலும் வனத்துறையில் பணியில் உள்ளதாகவும் தன்னிடம் ஐடி கார்டு உள்ளது. என முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை வனத்துறையினர் வசம் போலீசார் ஒப்படைத்தனர்.
Next Story