பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தேமுதிகவினர்

X
Pallipalayam King 24x7 |26 Aug 2024 5:53 PM ISTகேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் ஒட்டி பொதுமக்களுக்கு தேமுதிக அன்னதானம் வழங்கினார்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், நடிகருமான மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினத்தை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் ,இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் குட்டைமுக்கு பகுதியில் கட்சிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்விற்கு நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். இதன் பிறகு அக்னி மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்ற பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கும் நிகழ்வில் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் விஜய சரவணன் ,மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், ப உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி உணவை வழங்கினர். மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து, சிக்கன் பிரியாணி உணவை மகிழ்ச்சியுடன் ருசித்தனர். இந்த விழாவில் தேமுதிக நகர துணைச் செயலாளர் நாகராஜ் , நகர மகளிர் அணி சாந்தி, தங்கம்மாள், ஜமுனா, நகர கேப்டன் மன்ற கண்ணன், குமார் மற்றும் வார்டு நிர்வாகிகள் முருகன், அகிலன், சண்முகம், ராமச்சந்திரன், நாகராஜ் சென்னை கிருஷ்ணன் மகாலிங்கம் முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story
