மரக்காணம் பகுதியில் சாலைகளில் குவியலாக வைக்கப்படும் தானியங்கள்.
Tindivanam King 24x7 |26 Aug 2024 2:18 PM GMT
இரவு நேரங்களில் விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கந்தாடு, காணிமேடு, நடுக்குப்பம், ஆலத்தூர், வடநெற்குணம், ஆலங்குப்பம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர், இவர்கள் தங்களது விலை நிலங்களில் மணிலா, நெல், கம்பு கேழ்வரகு சோளம் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்கின்றனர். இந்தப் பயிர்கள் நன்கு விளைந்து அறுவடை செய்கின்றனர். இதுபோல் அறுவடை செய்யப்படும் தானியங்களை உலர வைக்க பல கிராமங்களில் விவசாய உலர் கலங்கள் இல்லை.இதனால் அப்பகுதியில் விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் அலுவல செய்யப்பட்ட பயிர்களை தங்களது வீட்டிலிருந்து அதிக தூரம் உள்ள பொது சாலைகளில் கொட்டி காய வைக்கின்றனர். இது போல் காய வைக்கப்படும் தானியங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் அந்த சாலைகளிலேயே குவில் குவியிலாக கூட்டி பாலித்தீன் பைகளை மூடி அந்தக் குவியல்கள் ஓரம் கற்களையும் அடுக்கி வைக்கின்றனர். இதுபோல் குவியல்கள் அமைக்கப்படும் பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாமல் சில இடங்களில் இருள் சூழ்ந்தே இருக்கும்.அப்போது அந்தப் பகுதிகள் வழியாக வரும் வாகன ஓட்டிகள் விவசாயப் பொருள்களின் குவியல்கள் இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விடுகின்றனர்.இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் உண்டாகிறது. ஒரு சில நேரங்களில் தவிர்க்க முடியாத உயிர் இழப்புகளும் உண்டாகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலம் கருதி சாலைகளில் இரவு நேரங்களில் விவசாய பொருட்களை குவியல் குவியலாக வைப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story