எடப்பாடியில் உறியடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது .

X
Edappadi King 24x7 |26 Aug 2024 11:28 PM ISTகோகுல அஷ்டமியை முன்னிட்டுஎடப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் முன்பு உறியடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது .
கோகுல அஷ்டமியை முன்னிட்டு எடப்பாடி பேருந்து நிலையத்தில் இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் செயல்பாட்டு வரும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் சுவாமிகள் எடப்பாடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம் முழங்க திருவீதி உலா வந்து கோவிலின் முன்பு பிரம்மாண்டமாக உயரத்தில் கட்டப்பட்ட உறியை அடிக்கும் விழாவான உறியடி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது உறியை அடிப்பவர் மீது மஞ்சள் நீரை ஊற்றிய போது அதனையும் மீறி முயற்சி செய்து தத்துருவமாக உறியடித்து அசத்தினார். இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்து கண்டு ரசித்து பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் சுவாமிகளை வழிபட்டு சென்றனர்...
Next Story
