மகளிர் பள்ளியில் மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு
Thoothukudi King 24x7 |27 Aug 2024 2:45 AM GMT
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. இதில் பள்ளி மேலாண்மை குழுவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தலைவராக ரெங்கம்மாள்,துணைத் தலைவராக காயத்ரி உட்பட 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார், பார்வையாளர் சுரேஷ் பாண்டி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை உஷாஷோஸ்பின் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் மாணவர்களின் கற்ப்பித்தில் திறனை மேம்படுத்துவதற்கும், பள்ளியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் சித்ராதேவி, உமா மகேஸ்வரி, ரோட்டரி சங்க உறுப்பினர் முத்துமுருகன் மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
Next Story