இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகள் பறிமுதல் : ஒருவர் கைது!

X
தூத்துக்குடி திரேஸ்புரம் கடகரை பகுதியில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திரேஸ்புரம் கடற்கரையின் வடக்கு பகுதியில் படகு பழுது சரி பார்க்கும் இடத்தில் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட சுமார் 30 கிலோ வீதம் 9 மூட்டைகளில் இருந்த பீடி இலைகளையும், அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜான்சன் (36) என்பரை கைது செய்தனர். மேலும் ஆரோக்கிய ஜான்சனுக்கு சொந்தமான பைபர் படகில் கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்கள், மீதி இருந்த பீடி இலை மூட்டைகளுடன் கடலுக்குள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Next Story

