ஓடைபட்டி கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
Dindigul King 24x7 |27 Aug 2024 3:57 AM GMT
திண்டுக்கல் அருகே ஓடைபட்டி கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி நீண்ட நேரம் போராடி உடலை மீட்க தீயணைப்புத் துறையினர்
திண்டுக்கல்லை அடுத்துள்ள, ஓடைப்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நண்பர்களுடன் சென்ற இ.பி.காலனி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஜனார்த்தன் வயது 32 என்பவர் கிணற்றின் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறை மாவட்ட உதவி அலுவலர் மயிலராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி ஜனார்த்தனின் உடலை மீட்டனர். தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சந்திர மோகன் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் ஜனார்த்தனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story