மர்மமான முறையில் சாலை ஓரம் இறந்த கிடந்த வாலிபர்
Dindigul King 24x7 |27 Aug 2024 4:00 AM GMT
கொடைரோடு அருகே, அம்மையநாயக்கனூரில் மர்மமான முறையில் சாலை ஓரம் இறந்த கிடந்த வாலிபர். காவல்துறையினர் தீவிர விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி அவரது மகன் அருண்குமார் வயது 24 இவர் கொடைரோட்டில் உள்ள பாஸ்ட்புட் கடையில் மாஸ்டராக வேலை செய்துவரும் இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில், கொடைரோட்டில் இருந்து அம்மையநாயக்கனூர் செல்லும் நெடுஞ்சாலையின் இடது ஓரம் புற்கள் நிறைந்த பகுதியில் முகம், கழுத்து, நெஞ்சு, கை, கால்களில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திங்கள்கிழமை அதிகாலை காலை அக்கம் பக்கத்தினர் பார்த்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருண்குமாரின் உடலை கைப்பற்றி, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து, அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காவல்துறையினர் விசாரணையில் பாஸ்ட்புட் கடையில் மாஸ்டராக வேலை செய்து வரும் அருண்குமார் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 க்குமேல் பணி முடித்துவிட்டு அவரது எக்ஸ்.எல் வாகனத்தில் சிலுக்குவார்பட்டியில் உள்ள அவரது நிறைமாத கர்பிணியை பார்க்க மாமனார் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story