தொடர் உண்ணாவிரத போராட்டம் குறித்து தலைவர் அறிக்கை

தொடர் உண்ணாவிரத போராட்டம் குறித்து தலைவர் அறிக்கை
எஸ்டிபிஐ கட்சி தலைவர் அறிக்கை
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பிபிடிசி நிர்வாககத்தின் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களாகவே நான்கு தலைமுறைகளை கடந்து அந்த பகுதிகளிலே வசித்து வரும் தொழிலாளர்கள் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை கடந்த ஆறு மாதங்களாகவே, ஜனநாயக முறையில், சட்டப் போராட்டம், கஞ்சி தொட்டி போராட்டம் என அரசு கவனம் ஈர்க்க வேண்டி பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால் அந்த மக்கள் நீதி கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இனியாவது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை செவி சாய்க்குமா? அரசின் விதிமுறைக்கு எதிராக சட்டத்திற்க்கு விரோதமாக தயார் செய்த கள்ள சாராயம் குடித்து இறந்த நபர்களுக்காக மனமிறங்கிய சமூக நீதி அரசே மாஞ்சோலை தொழிலாளர்கள் குடும்பங்களின் உயிர் பறிபோனால்தான் தீர்வா? ஜனநாயக அரசா அல்லது சர்வாதிகார அரசா, ஜனநாயக சக்திகள் ஒன்றினைவோம் மாஞ்சோலை மக்களோடு துணை நிற்போம் என திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் பீர் மஸ்தான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Next Story