மஞ்சள் நீராடி, கோபியர்கள் கோலாட்டத்துடன் உறியடி திருவிழா
Dindigul King 24x7 |27 Aug 2024 4:07 AM GMT
மஞ்சள் நீராடி, கோபியர்கள் கோலாட்டத்துடன் YMR பட்டியில் உறியடி திருவிழா கோலாகலம்
திண்டுக்கல் ஒய் எம்.ஆர் பட்டி கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மஞ்சள் நீராடி, கோபியர்கள் கோலாட்டத்துடன் கோலாகலமாக உறியடித் திருவிழா நடந்தது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி கிருஷ்ணன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி 5 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவிலில் திருவிழா தொடங்கியது. திங்கள்கிழமை காலை சாமிக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணி அளவில் மஞ்சள் நீராடி, கோபியர்கள் கோலாட்டம் ஆடி, உறியடி திருவிழா நடந்தது. பின்னர் இரவு 8:30மணி அளவில் சாமி மின்னொளி தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். உறியடி திருவிழாவை முன்னிட்டு திமுக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் துணை மேயர் ராஜப்பா ராஜேந்திரகுமார் மீடியா சரவணன் இல.கண்ணன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், நத்தம் ஒன்றிய தலைவர் கண்ணன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர்,முன்னாள் கவுன்சிலர் மோகன், நெப்போலியன் உட்பட பலர் சாமி தரிசனம் செய்தனர். வாணவேடிக்கை சிறப்பாக நடந்தது. இதற்கிடையே கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும், குழந்தைகள் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.
Next Story