திருப்பூர் மேட்டுபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள நல வாரியம் அலுவலகம் முன்பு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம்!
Tiruppur (North) King 24x7 |27 Aug 2024 6:38 AM GMT
திருப்பூர் மேட்டுபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள நல வாரியம் அலுவலகம் முன்பு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நல வாரிய அலுவலகம் முன்பாக ஏ ஐ டி யு சி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையிட போராட்டம் நடைபெற்றது. வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் , நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தின் உள்ளபடி இ எஸ் ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும் , வாரிய முடிவு படி ஓய்வூதியம் மாதம் 2000 ரூபாய் உடனே வழங்க வேண்டும். மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். வீடு மானியம் 4 லட்சம் என்பதை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வேலை இடத்தில் விபத்தில் மரணம் அடையும் , ஊனமடையும் தொழிலாளிக்கு இழப்பீடு சட்டப்படி முழு இழப்பீடாக வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் போல் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் அனைத்து பண பயன்களும் மனு செய்த 30 நாட்களில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்ககள் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நலவாரிய அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story