ஒன்றிய பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பல்வேறு துறை சார்ந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Tiruchengode King 24x7 |27 Aug 2024 9:29 AM GMT
ஒன்றிய பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பல்வேறு துறை சார்ந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, பயிலும் வகுப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மாணவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, ஆட்சித் தலைவர் மாணவர்களுடன் கலந்துரையாடி நன்கு கல்வி பயிலுமாறும், அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.
Next Story