முருகன் மாநாட்டு கண்காட்சிக்கு மாணவ, மாணவிகள் வருகை
Dindigul King 24x7 |27 Aug 2024 4:25 PM GMT
பழனியாண்டவர் கல்லூரியில் நடைபெற்று வரும் முருகன் மாநாட்டு கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வருகை
பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு 24,25 ம் என இரு தினங்கள் நடைபெற்று நிறைவடைந்தது. மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் கலந்துகொண்டனர். மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த வேல் அரங்கம், 3d திரையரங்கு, vr தொழில்நுட்பத்தில் அறுபடை வீடுகளை தரிசனம் செய்யும் நிகழ்வு, புத்தக கண்காட்சி மற்றும் புகைப்பட கண்காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மாநாடு முடிந்தும் வருகிற 30-ஆம் தேதி வரை கண்காட்சி தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனையொட்டி கண்காட்சி அரங்கத்தை காண தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் இன்று பள்ளி,கல்லூரி மாணவ ,மாணவிகள் பள்ளி நிர்வாகம் சார்பில் அழைத்து வந்துள்ளனர். இதில் ஏராளமானோர் பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ளனர். 3d திரையரங்கு மற்றும் அறுபடை வீடுகளை நேரில் பார்ப்பது போல உணர்வதாக கண்காட்சியை பார்த்து விட்டு வந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கண்காட்சி தொடர்ந்து சில தினங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதால் வருகை தரும் பொது மக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சர்க்கரை பொங்கல் ,வெண்பொங்கல் , வழங்கப்பட்டு வருகிறது.
Next Story