தனியார் தொழிற்சாலையில நிகழ்ந்த உயிர் இழப்புகள் : போலீசார் விசாரணை
Tiruvallur King 24x7 |28 Aug 2024 3:10 AM GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் தனியார் தொழிற்சாலையில நிகழ்ந்த உயிர் இழப்புகள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருவள்ளூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் தனியார் தொழிற்சாலையில நிகழ்ந்த உயிர் இழப்புகள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் சத்திரம் கிராமத்தில் ஸ்டார் பாக்ஸ் என்ற அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சீனிவாசன் வயது 28 கொதிக்கும் பாய்லர் சுடு தண்ணீர் தொட்டியில் விழுந்து சவிதா தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்து சடலத்தை கைப்பற்றிய மணவாளன் நகர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நான்கு நாட்களாக தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சீனிவாசன் பாய்லரில் தவறி விழுந்தது குறித்து தொழிற்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சியில் இருவர் அவரை விரட்டிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில் பாய்லர் சுடுதண்ணீர் தொட்டி அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவை தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற்று விசாரணையை மணவாள நகர் காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அதேபோன்று கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய புலியூர் கிராமத்தில் தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு ஸ்கிராப் இரும்பு கொண்டு வந்த லாரி டிரைவர் லாரியில் இருந்து கயிறு அவிழ்க்க முயற்சி செய்த போது உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டத்தில் மின்சாரம் பாய்ந்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் நித்தியானந்தம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை தகவல் அறிந்து வந்து கைப்பற்றிய பாதிரிவேடு காவல்துறையினர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story