டிரினிடி மகளிர் கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்!!

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'பெண்மையே பேசு' என்ற தலைப்பிலான கவிதைப்போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள ட்ரினிட்டி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று பெண்மையே பேசு என்ற தலைப்பிலான கவிதை போட்டி நடைபெற்றது எனவேஇந்நிகழ்வினை கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் துவக்கி வைத்தார். முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். கல்லூரி வெள்ளி விழா குழு ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன் நிகழ்ச்சி குறித்து எடுத்துக் கூறினார். கவிதை, கட்டுரை, ஓவியம், பாட்டு, புதிர் விளையாட்டு, தனிநபர் நடிப்பு, இசைக் கருவிகள் இசைத்தல், கருத்து விளக்கப்படம், செப்புக செந்தமிழ், தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சு ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தமிழ்த்துறை துறைத்தலைவர்கள் தா.க. அனுராதா மற்றும் இர. சாவித்திரி ஆகியோர் இந்நிகழ்வில் பேசினர். மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Next Story