மாவட்ட ஆட்சியர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

X
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தேவனாங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 703 பயனாளிகளுக்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை தேடி அரசு சென்று அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்று உரிய தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த முகாம்கள் அப்பகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கவும், அரசின் அனைத்து திட்டங்கள் குறித்தும் அனைத்து துறைகளின் மூலமாக கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து விளக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு வட்டம், தேவனாங்குறிச்சி கிராமத்தில் இன்றைய தினம் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறுகிறது. மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளனvஎனக்கூறினார் மக்கள் அரசிடம் எதிர்பார்க்கும் எந்த ஒரு கோரிக்கையையும் விடுபடாமல் கனிவுடன் ஏற்று பரிசீலித்து உரிய முறையில் தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதற்கட்டமாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முகாம்கள் நடத்த உத்தரவிட்டார்கள். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 95 சதவிகித கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்ட சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிடப்பட்டு, நேற்றுடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 322 ஊராட்சிகளுக்கு 69 இடங்களில் "மக்களுடன் முதல்வர்" திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகுதியான மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. முன்னதாக வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். மேலும், துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசுத்திட்டங்கள் குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள்.. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் என்.அருண்குமார், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தச.பிரபாகரன், மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் .த.முத்துராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ப.கவிதா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாராயணன், உதவி இயக்குநர் (நில அளவை) இரா.ஜெயசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இளநிலை மறுவாழ்வு அலுவலர் ரா.பிரகாஷ், வட்டாட்சியர் விஜயகாந்த் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

