பால்வினை நோய் தொற்று குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி
Perambalur King 24x7 |28 Aug 2024 11:52 AM GMT
ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பாக எச்ஐவி- எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி பெரம்பலூரில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதாப் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்ஐவி -எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள், காச நோய் ,சுகாதாரம் பற்றி பயிற்சி அளித்தார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் சுமதி விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை திட்ட மேலாளர் ஆலோசகர் , மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story