லட்சுமணபட்டியில் பலவண்ண கிரானைட் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

லட்சுமணபட்டியில் பலவண்ண கிரானைட் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
லட்சுமணபட்டியில் பலவண்ண கிரானைட் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து,கரூர் மாவட்டம், குளித்தலை, அருகே லட்சுமணப்பட்டியில் உள்ள ஸ்ரீ பாலம்மாள் மஹாலில் தனபால் நிறுவனத்தினர் வீரியம்பாளையம் கிராமத்தில் நிறுவ உள்ள பல வண்ண கிரானைட் குவாரி குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் குளித்தலை கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பு அலுவலர் ஜெயகுமார், குவாரி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குவாரி அமைப்பதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சமூக ஆர்வலர்களும் இயற்கை ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அதே சமயம் கிராம பகுதியில் பல வண்ண கிரானைட் குவாரி அமைய இருப்பதால் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கருத்துக்களை பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்து, இதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்ப உள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Next Story