கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்த ஜவுளி உற்பத்தியாளர் கைது
Komarapalayam King 24x7 |28 Aug 2024 1:38 PM GMT
குமாரபாளையம் அருகே கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்த ஜவுளி உற்பத்தியாளர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு பகுதியில் விசைத்தறிகள் வைத்து தொழில் செய்து வருபவர் ராஜேந்திரன், 47. இவரது விசைத்தறி பட்டறையில் கைத்தறி ரக ஜவுளிகள் உற்பத்தி செய்வதாக புகார் எழுந்தது. இதையொட்டி திருச்செங்கோடு, கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம், உதவி அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, 46, நேற்று நேரில் ஆய்வு செய்தார். ராஜேந்திரன் விசைத்தறி பட்டறையில் இருந்த 14 விசைத்தறிகளில் ஒரு தறியில், கைத்தறி ரகமான பார்டருடன் கூடிய அங்கவஸ்திரம் ரகம் ஓடிக்கொண்டு இருந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் விஜயலட்சுமி புகார் செய்து, உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளுக்கு சீல் வைத்து, நிறுவன உரிமையாளரை கைது செய்ய வேண்டி, புகார் செய்தார். இந்த புகாரின் படி குமாரபாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கைத்தறி ரகத்தை, விசைத்தறியில் ஓட்டிய ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.
Next Story