இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் படையப்பா நகர் பேருந்து நிலைய மாறுதல் திட்டத்தை ரத்து செய்ய கோரி மனு ..
Rasipuram King 24x7 |28 Aug 2024 1:42 PM GMT
இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் படையப்பா நகர் பேருந்து நிலைய மாறுதல் திட்டத்தை ரத்து செய்ய கோரி மனு ..
இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் படையப்பா நகர் பேருந்து நிலைய மாறுதல் திட்டத்தை ரத்து செய்யவும் இத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மீது விசாரணை கோரி மனு பழம்பெருமையும், வரலாறும் கொண்ட இராசிபுரம் நகரம் வளரவில்லை என்ற ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கி இராசிபுரம் நகர மக்களின் வாழ்வாதாரமாக தற்போது இயங்கி வரும் புதிய பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராசிபுரம் நகரத்திற்கு தொடர்பே இல்லாத அணைப்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள படையப்பா நகரில் அமைக்க ஆளும் திமுக தலைவர்கள் முடிவு செய்து 27-06 -2024 அன்று நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி,அதனைத் தொடர்ந்து 05-07-2024 அன்று மாலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளை அழைக்காமல் ஒரு கண் துடைப்பு கருத்து கேட்டு கூட்டத்தை நடத்தினார்கள். அக்கூட்டத்தில் யாரேனும் பேருந்து நிலையம் அமைக்க நிலம் தானமாக வழங்கலாம் என மாநிலங்களவை உறுப்பினர் திரு ராஜேஷ்குமார், அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார். அன்றைய தினம் மதியம் கருத்து கேட்புக் கூட்டத்திற்கு முன்னதாகவே படையப்பா நகர் பாஸ்கர் அவர்களிடத்தில் இருந்து சுமார் 7.3 ஏக்கர் நிலம் தானமாக நகராட்சி ஆணையாளர் பெயரில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் திமுக தலைவர்களின் இந்த மோசடி இராசிபுரம் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேற்கண்ட வெளிப்படை தன்மையற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் ஆளுங்கட்சியினரின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகள், சேவை அமைப்புகள் உள்ளடக்கிய இராசிபுரம் புதிய பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு அறிவித்த 18-07-2024 அன்றைய முழு கடையடைப்பு போராட்டத்தில் அனைத்து பகுதி பொதுமக்களும் முழுமையாக பங்கெடுத்து தங்களது எதிர்ப்பை அரசிற்கு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 05-07-24 அன்றே பேருந்து நிலைய மாற்றத்தை ரத்து செய்யக்கோரி நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். 8-07-24 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் மனுக்கொடுத்தும், 18-07-24 அன்று இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று 100% இராசிபுரம் நகர மக்கள் முழுமையான கடை அடைப்பு போராட்டம் நடத்தியும், 26-07-24 அன்று இராசிபுரம் நகராட்சியில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி தனிநபர் மனுக்களை கொடுத்துப் போராட்டம், நடைபெற்றது. 31-07-24 நீதிமன்றத்தில் அனுமதி பெற்று உண்ணாவிரத போராட்டம், 07-08-24 அன்று இராசிபுரம் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மனு கொடுக்கும் போராட்டம், 15-08-24 ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி நகராட்சி நிர்வாகம் ,மாவட்ட நிர்வாகம் மாநில நிர்வாகத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டம் நடத்தினர். எனவே இன்று வரையில் தொடர்ச்சியாக போராட்டத்தை இராசிபுரம் பேருந்துநிலைய மீட்பு கூட்டமைப்பு நடத்திக்கொண்டு வருகிறது. தமிழக அரசும் ,மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு பேருந்து நிலைய இடம் மாறுதல் நடவடிக்கைகளை திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அரசு தரப்பிலும் மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக ஆளும் கட்சியினரின் உத்தரவுகளுக்கு பணிந்து செயல்படும் ஆளுங்கட்சியினரின் தொண்டரணியை போல் தமிழக அரசு நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு திமுக மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். இராஜேஷ்குமார், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சருமான மா.மதிவேந்தன், நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் ஆகியோர்களின் சொந்த சுயஆதாயத்திற்காக* ஏழு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பொட்டல் காட்டில் பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இராசிபுரம் நகரத்தில் எந்தவிதமான தொழில் வாய்ப்புகளும் கிடையாது.இராசிபுரம் நகரம் ஆத்தூர் மார்க்கத்தில் செல்லும் கிராமங்கள்,பேளுக்குறிச்சி மார்க்கத்தில் செல்லும் கிராமங்கள், திருச்செங்கோடு மார்க்கத்தில் அமைந்துள்ள கிராமங்கள், மல்லூர் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் நுகர்வே இராசிபுரம் நகரத்தின் அடிப்படையாகும். இராசிபுரம் நகரத்தில் வணிக வியாபார கடைகள்,உணவகங்கள், சாலை ஓர கடைகள்,மூலம் நடக்கும் வியாபாரங்களை நம்பியே இராசிபுரம் நகரத்தில் சுமார் 10,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.இராசிபுரம் நகருக்கு தொடர்பே இல்லாத அணைப்பாளையம் பஞ்சாயத்தில் இருக்கின்ற படையப்பா நகரில் பேருந்து நிலையம் அமைந்தால் இராசிபுரத்தின் ஒட்டுமொத்த இயக்கமே ஸ்தம்பித்து விடும்.பத்தாயிரம் குடும்பத்தின் வாழ்வாதாரமே கேள்விக்குறியதாகி விடும்.ஆகவே அணைப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் திட்டத்தை கைவிடக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படையப்பா நகர் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்காக பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு பின்னால் ஆளுங்கட்சியை சார்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர் உள்ளிட்டோர் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி னர்..ஆகவே இந்தப் பிரச்சினை நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவருதற்காக தகுந்த விசாரணையை நடத்த உத்தரவிட கோரி ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு. (அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சேவை அமைப்புகள்) சார்பில் நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் சந்திரசேகர் சென்னை அவர்கள் ராசிபுரம் நகராட்சியில் ஆய்வு பணிக்காக வந்திருந்தார்.அவரை நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர் மேல் கண்ட மனுவை அளித்தனர் .
Next Story