தேமுதிக நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய பகுதியில் கேப்டன் பிறந்தநாள் விழா நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாடினர்.

தேமுதிக நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய பகுதியில் கேப்டன் பிறந்தநாள் விழா நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாடினர்.
தேமுதிக நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய பகுதியில் கேப்டன் பிறந்தநாள் விழா நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாடினர்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை ஒழிப்பு தினம் அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம், முன்னாள் ஒன்றிய செயலாளர் A.D வேல்முருகன், தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் அம்மன் வெங்கடாசலம் கலந்து கொண்டு பேரூர் கலை அரங்கத்தில் கொடி ஏற்றி வைத்தும், சாரோன் முதியோர் இல்லத்தில் அன்னதானம், மற்றும் உணவு பொருட்கள், நன்கொடை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் தொகுதி ஒன்றிய செயலாளர் பி.கணேஷ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் R. சூர்யா ,ராஜேந்திரன், பி தங்கவேல், எம் ஆர் சரவணன், ஆர் செல்வக்குமார், R. செல்வி, ராதா, பேரூர் கழக செயலாளர் M. மாதேஷ், பெரியசாமி, அவை தலைவர் மற்றும் நிர்வாகிகள் பெரியசாமி, செல்வராஜ், பிரபு பிச்சமுத்து, செல்வம், மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும், நன்றிகளையும் முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் ஏ.டி.வேல்முருகன் தெரிவித்துக் கொண்டார்.
Next Story