நாகர்கோவில் அருகே ரயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை
Nagercoil King 24x7 |28 Aug 2024 2:58 PM GMT
விசாரணை
குமரி மாவட்டம் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே உள்ள செங்குளம் ரயில்வே தண்டவாளத்தில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் இறந்தவர் நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பால்பாண்டி (39) என்பது தெரிய வந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பால்பாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பால்பாண்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் டூவீலர் மெக்கானிக்காக பணி புரிந்து வந்தார். பின்னர் அந்த தொழில் சரியாக நடக்காததால் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு மது குடிக்க பழக்கம் இருந்துள்ளது. சரியாக வேலைக்கு செல்லாதால் வீட்டில் உள்ளவர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் கோபத்தில் அடிக்கடி சாகப் போகிறேன் என்று கூறியுள்ளார். நேற்றும் இதே போல வீட்டில் இருந்து சாகப் போறேன் என்று கூறிவிட்டு வந்து ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story