வாழை திரைப்படம் எனது கதை சாகித்யா அகாடமி விருது பெற்ற சோ.தர்மன் பேட்டி

வாழை திரைப்படம் எனது கதை சாகித்யா அகாடமி விருது பெற்ற சோ.தர்மன் பேட்டி
நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத்தான் தற்போது மாரி செல்வராஜ் காட்சி ஊடகத்தில் வாழை தலைப்பில் திரைப்படமாக கொண்டு வந்துள்ளார் ரஜினி கமல் விஜய் இடம் கால்ஷீட் பெற்றுக் கொண்டு கதையை தேடி அலைகின்றனர் - சாகித்யா அகாடமி விருது பெற்ற சோ.தர்மன் பேட்டி
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி கடந்த 23 தேதி வெளியான வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் இடம் பெறும் வரவேற்பை பெற்று வருகிறது மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பாடமாக எடுத்து உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார் இந்நிலையில் வாழை திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகள் அனைத்தும் நீர்ப்பலி சிறுகதை புத்தகத்தில் இடம் பெற்று இருப்பதாகவும் இது தொடர்பாக சோ. தர்மனை அவரது நண்பர்கள் தொடர்பு கொண்டு வாழை திரைப்படத்தை பார்க்குமாறும் கூறியதாகவும் அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.. இவ்விவகாரம் தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் நான் திரைப்படங்கள் பெரிதாக பார்ப்பதில்லை ஆனால் என்னுடைய நெருங்கிய எழுத்தாளர்கள் வாழை திரைப்படம் பார்த்தீர்களா என்று கேட்டார்கள் என்ன என்று கேட்கும் பொழுது நீங்கள் எழுதிய நீர்ப்பழி சிறுகதையை தான் படமாக்கி உள்ளார்கள் என்று தெரிவித்தார்கள் இந்நிலையில் நேற்று வாழை திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழை திரைப்படத்தை சிறுகதையாக எழுதியுள்ளேன் என்னுடைய சிறுகதைக்கு பெயர் வாழையடி என்று இருக்கும் ஏனென்றால் வாழையடி வாழையாக சிறுவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்று எழுதியிருப்பேன் நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத்தான் தற்போது மாரி செல்வராஜ் காட்சி ஊடகத்தில் வாழை தலைப்பில் திரைப்படமாக கொண்டு வந்துள்ளார் வாழை திரைப்படத்தில் சிறுவர்கள் வாழைத்தார் தூக்கி கஷ்டப்படும் காட்சிகள் இடைத்தரகர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தண்ணீரில் விழும் காட்சிகள் என என்னுடைய சிறுகதையில் வரக்கூடிய அத்தனை கதைகளும் வாழை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது சினிமாவிற்காக கூடுதலாக வேறு காட்சிகள் படமாக்கியுள்ளனர் மற்றபடி முழுக்க முழுக்க என்னுடைய கதைதான் கரிசல்காட்டு இலக்கிய எழுத்தாளர் நான் வாழை பற்றி எழுத காரணம் என்னுடைய உறவினர்கள் பொன்னங்குறிச்சி பகுதியில் இருந்த பொழுது அங்கு வாழை லாரியில் ஏற்றி செல்லும் இப்பொழுதும் அங்கு சிறுவர்கள் கஷ்டப்படுவதையும் அவர்களிடம் கேட்டு என் சிறுகதையில் எழுதியுள்ளேன் இக்கதையை பயன்படுத்த முறையாக யாரும் அனுமதி பெறவில்லை என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை பிரம்மாண்டங்களை காட்டி வெளிவரும் திரைப்படங்களை மக்கள் நிராகரிக்கின்றனர் நல்ல கதை என்ற மட்டும் மக்கள் பார்க்கின்றனர் திரைப்படத்திற்கு ஆதரவு தருகின்றனர் உதாரணத்திற்கு வாழை திரைப்படம் தமிழ் சினிமா தற்போது கமல் ரஜினி விஜய் என்ற கதாநாயகர்களை மையப்படுத்திய கதைகளைத் தேடி அவர்களுக்கான கதைகளை உருவாக்கி அவர்களை நடிக்க வைப்பதால் தான் தோல்வியை தழுவுகின்ற படங்கள் ரஜினி கமல் விஜய் இடம் கால்ஷீட் பெற்றுக் கொண்டு கதையை தேடி அலைகின்றனர் கதை எங்கு நிகழ்கிறதோ அங்கு தான் அதை காட்சிப்படுத்தி திரைப்படமாக எடுக்க வேண்டும் இயக்குனர்கள் எல்லாம் ஒட்டு துணியை பெரக்கி பட்டு சேலை தைத்து தன் பெயரை வைத்து கொள்பது தான் தற்போதைய இயக்குனர்கள் வேலை.. மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் அவருடைய சொந்த அனுபவம் தான் என்னுடைய கதையும் தான் சிறுவர்கள் படும் வேதனையை வலியை வேதனையை அடையாளமாக முதன் முதலில் படைப்பாக உருவாக்கியவன் நான் தான் அதற்கு அவர் உயிர் கொடுத்து உள்ளார் வெகுஜன ஊடகத்தின் மூலமாக உயிர் கொடுத்து இருக்கிறார் .. அதனால் வாழை திரைப்படம் லட்சக்கணக்கான பேரிடம் சென்றடைந்துள்ளது என்னுடைய சிறுகதை இலக்கியமாகவே ஆயிரம் பேருடன் நின்றுவிட்டது என்றார்.
Next Story