வசந்தகுமார் நினைவு தினம் : காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!
Thoothukudi King 24x7 |29 Aug 2024 3:03 AM GMT
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வர்த்தக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹெச்.வசந்தகுமார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
வர்த்தக காங்கிரஸ் மாநிலத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹெச்.வசந்தகுமார் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பால விநாயகர் கோயில் தெருவில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக பிரிவு நகரத் தலைவர் ஏஜே அருள்வளன், மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் இக்னேஷியஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹெச்.வசந்தகுமார் திருவுருவப் படத்திற்கு வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி. டேவிட் பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, கோபால், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, சேகர் எஸ்சி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, சம்சுதீன், சாந்தகுமார், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி உமா மகேஸ்வரி, சுரேஷ்குமார், ஜான் வெஸ்லி, ஏசுதாஸ், அமைப்புசாரா சுந்தர்ராஜ், தெய்வேந்திரன், முத்துராஜ், ஜெபதுரை, கனகவேல், கன்னிச்சாமி பாண்டியன், முருகேசன், வாசி ராஜன், ஐஎன்டியூசி சிவலிங்கம், முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதரன், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story