போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

X
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 03.05 2024 ம் தேதி 04 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விறுவீடு பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து வயது 38 என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப், அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்திய பிரபா, நீதிமன்ற முதல் நிலை காவலர் அனிதா மேரி மற்றும் அரசு வழக்கறிஞர் . மைதிலி ஆகியோர் முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி பிச்சைமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 38 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

