சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் கோரிக்கை

X
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதி குடியிருப்பு இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு நிலவுகிறது. மேலும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகின்றது. எனவே இதனை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜர் நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

